சண்முகம் சிவலிங்கம் (12/19/1936 – 04/20/012, பாண்டிருப்பு) ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாசிரியருமாவார். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வந்த சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். ஒருவர் ஈழப்போராட்டத்தில் களத்தில் உயிரிழந்தவர்.
இதுவரையில் ‘நீர்வளையங்கள்’ [தமிழியல் 1988], ‘சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும்’ [காலச்சுவடு 2010] என்ற இரண்டு கவிதைத் தொகுதிகள் நூல்களாக வெளிவந்துள்ளன. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஆக்காண்டி ஆக்காண்டி
ஆக்காண்டி, ஆக்காண்டி வைத்ததுவோ ஐஞ்சு முட்டை ஆக்காண்டி, ஆக்காண்டி குஞ்சு பசியோடு கடலை இறைத்துக் கடலிலே கண்டதெல்லாம் கண்ணீர் உகுத்தேன் ஆக்காண்டி, ஆக்காண்டி வண்டிகள் ஓட்டி கையால் பிடித்துக் கொல்லன் உலையைக் நெய்யும் தறியிலே சீலை கழுவி வீதி சமைத்தேன். விண்வெளியில் செல்லுதற்குப் ஆனாலும் குஞ்சுக்கு கதறி அழுகையிலே கடல் இரத்தம் ஆகுமென்று ஆக்காண்டி, ஆக்காண்டி குஞ்சு வளர்ந்ததும் பசியைத் தணிக்கப் கடலை இறைத்துக் வயலை உழுது கொல்லன் உலையும் சொல்லி முடிவதற்குள் “கடலும் நமதன்னை வைத்ததுவோ ஐஞ்சு முட்டை ஆக்காண்டி, ஆக்காண்டி |
காண்டாவனம் வெளியீடு: December, 2014
![]() சண்முகம் சிவலிங்கம் இலங்கையின் மிக முக்கிய கவிஞரும் எழுத்தாளருமாவார். இந்திய அமைதிப்படைகளின் காலம் இந்தக் கதைத் தொகுப்பின் மையமாக வந்து நேர்ந்திருக்கின்றது. இந்திய அமைதிப் படையின் முன்னான காலமும் பின்னான காலமும் கூட இந்தக் கதைகளில் அவதானிக்கக் கூடியவை. ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர், எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது கவிதைகளையோ தவிர்த்துவிட்டுப் பேசமுடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர், ஈழத்தின் சிறுகதை பற்றிப் பேசுவோரும் சண்முகம் சிவலிங்கத்தையோ அவரது சிறுகதைகளையோ தவிர்க்க முடியாது என்பதும் உண்மையாகும். காண்டாவனத்தை Amazon.com மூலமாகவும், PayPal(Buy Now Button) மூலமாகவும், Ingram Spark இன் Global Distribution Channel மூலமாகவும் பெற முடியும்: ![]() ![]()
|
Paperback/Hardcover: |
![]() |
http://youtu.be/mefZjLPsjE0