உள் – வெளி

அவன் அவளோடு கிடந்தான்.
உச்சி மோர்ந்தான்.
உள்ளங்கால் வரையில் மோர்ந்தான்.
புரட்டிப் புரட்டி எடுத்தான்
அவளும் நிமிர்ந்து நிமிர்ந்து கொடுத்தாள்.

எல்லாம் நீங்க
காலடி மங்கலில்
9” x 6” x 3”
அடிசற்றுச் சிறுத்த
வெண்கல நீள் சதுரத்துள்

சாம்பலும் வெண்மையும் கலந்த
வெடிகுண்டுப் பொறியின்
நீலமுள்ளி
கண்களை முளிசி, முளிசி,
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
வெடிப்பதற்கு
நிமிடங்களை எண்ணிக் கொண்டிருந்தது.

இருவரும் அதனைப் பார்த்தனர்.

உள்-வெளி கலந்த உணர்வில்
விடியல் தெளிகையில்,
இவள் எழுந்து
கதவைத் திறந்து போனபின்
இவன் எழுந்து
இந்தக் கவிதையை எழுதினான்
வெடிகுண்டு இருந்த இடத்தை
மீண்டும் ஒரு முறை பார்த்துக் கொண்டே….

Leave a Reply

Your email address will not be published.