மறு போகத்துக்கு காத்திருக்கும் மண்

இதோ செங்கதிரோனின் ‘விளைச்சல்’ குறுங்காவியம் என் கண்முன். அது நீலாவணனின் வேளாண்மை காவியத்தின் தொடர்ச்சி என கவிஞர் கூறுகிறார்.
‘விளைச்சல்’ குறுங்காவியத்தின் கருப்பொருள் , தொடுப்பு, கதையாடல், மொழியாடல். பாத்திரப்படைப்பு எல்லாவற்றையும் காண்கிறேன். அவைகளுக்கு அப்பால் வேறு சில விடயங்களையும் காண்கிறேன். அவை எல்லாவற்றையும் சொல்ல இடம் இருக்குமா என்றும் சந்தேகிக்கிறேன்.
வேளாண்மையின் கருப்பொருள்தான் விளைச்சலின் கருப்பொருள் என்பது கவிஞரின் உட்கிடை.. விளைச்சல் வேளாண்மையின் தடயத்தைக் கொண்டுள்ளது என்பது உண்மையே. எனினும் அது கேட்டுப்போதல், கலியாணம் மகப்பேறு ஆகியவை தொடர்பான சடங்கு சம்பிரதாயங்களை மட்டுமே தொட்டுச் செல்லக் காண்கிறேன்.
வேளாண்மையின் தொடுப்பு (pடழவவiபெ) ழெn டiநெயச – குறுக்கு மறுக்கானது. மோதலும் முரண்களும் உடையது எனினும் விளைச்சலின் தொடுப்பு டiநெயச – – நேரானது. சுபமானது சுலபமானது. முரண்கள் அற்றது. மோதல் அற்றது. தொடுப்பின் உள்ளோட்டம் குறைந்தது. சகலதுமே வெளியோட்டமாக வெளிப்படையானது.
கதையாடல் ( யெசசயவiஎந ) பெரும்பாலும் நேரடியான கூற்றுக்களாக உள்ளன. நாடகப்பாங்கு குறைவு. பின்நோக்கல் இரண்டொன்று மாத்திரம். மொழியாடல் என்ற பதத்தில் (உருவம்) படிமம், உருவகித்தல், உருவகம். சொல் உருக்கள், சொல் தேர்வு படிமம் போன்ற பல அமசங்களைக் காண்கிறேன்.
விளைச்சலின் பிரதான மொழிவடிவம் அல்லது உருவம் அறுசீர் விருத்தம், சிறிய அறுசீர் விருத்தத்தை பரவலாகவும் பெரிய அறுசீர் விருத்தத்தை இரண்டொரு இயல்களிலும் செங்கதிரோன் உபயோகித்துள்ளார். முதற் சீரும் நான்காம் சீரும் காய்ச்சீர்களாக அமைய ஏனையவை மாச்சீர்களாய் அமையும் சந்தத்தை கொண்டது சிறிய அறுசீர்விருத்தம். முதல் நான்கும் காய்ச்சீர்களாகவும் ஐந்தும் ஆறாம் மாச்சீராகவும் அமையும் சந்தத்தைக் கொண்டது. பெரிய அறுசீர்விருத்தம். இவைகளில் நேரக்கூடிய அசை குறைநிரப்புகளை பொருட்படுத்த வேண்டியதில்லை.
விளைச்சல் ;காவியத்தின் உருவத்தைப் பொறுத்தவரை செங்கதிரோனின் முதல்வெற்றியும் முக்கியமான வெற்றியும் அறுசீர் விருத்தத்தை வாலாயமாக்கிக் கொண்டதே. ‘கம்பன் வீட்டுத் தறியும் கவி பாடும்’ என்று சொல்வார்களே தறியின் ஒத்திசைவு கம்பனின் பாக்களில் உள்ளது என்று பொருள் கொள்வதா அல்லது தறி தன் ஒத்திசைவை கம்பனின் பாக்களில் இருந்து பெற்றுக்கொண்டது என்று பொருள் கொள்வதா? கம்பனது பாக்களின் ஒத்திசைவைக் கேட்டுக் கேட்டு தறி தன் ஒத்திசைவைப் பெற்றுக் கொண்டது என்ற பொருளைத்தான் நான் கொள்கிறேன். செங்கதிரோனின் விருத்தப்பாக்களைப் படிக்கும் பொழுது செங்கதிரோன் வேளாண்மையின் அறுசீர்விருத்தப்பாக்களை படிக்கப் படிக்க அவற்றின் சந்தம் ஒரு ஆவிபோல் செங்கதிரோனில் புகுந்து கொள்ள, யாப்பை சற்று பரிசீலித்து புரிந்து கொண்ட ஏகலைவனாகத்தான் செங்கதிரோன் இந்த வித்தையைக் கற்றுக் கொண்டார் என்று நான் நினைக்கிறேன். சிறந்த மொழியாட்சியை கொண்டவராகக் காணப்படும் செங்கதிரோனுக்கு இது எளிதில் கைகூடியது வியப்பில்லை.
வேளாண்மையில் ஆறு வகையான சந்தங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். அவைகளில் இரண்டை செங்கதிரோன் விளைச்சலில் உருப்போட்டிருக்கிறார். மேலும் வேளாண்மையின் 273 அறுசீர் விருத்தங்களுடன் விளைச்சலின் 67 விருத்தப்பாக்களை வைத்துப் பார்க்கும் பொழுது அண்ணனின் தோளுக்கு இன்னும் ஒரு அடிதான் வளரவேணும் என தம்பி குதூகலிக்கும் திருப்தி செங்கதிரோனுக்கு தாராளமாக ஏற்படலாம். இது ஒரு முக்கியமான சாதனை மட்டுமல்ல இன்னும் சாதிப்பதற்கு பாதையை திறந்து விட்ட சாதனையுமாகும்.
உவமை, உருவகம், உருக்கள், உருவகிப்பு, படிமம் அகியவை சார்ந்த விளைச்சலின் உருவக மொழி தொடர்பாய் சற்று விரிவாகச் சொல்லத் தோன்றுகிறது.
பத்து உவமைகள் ஒரு பக்கத்தை நிறைக்குமோ அறியேன்.

1. ‘பார்வதிப் பெத்தாவுடன் பள்ளயம் பார்க்கப்போன நேரத்தில் நீயும் அத்தான் நிழல் போல பின்னே வந்தாய்’
2. ‘ நேசத்தால் நெஞ்சமெல்லாம் நெய்யைப்போல் உருகுகின்றாள் ‘
3. ‘அன்னம்மா அறையின் உள்N;ள அணங்கென அழகுக் கோலம் ‘
4. ‘பூ ஒன்று நகர்ந்தாற் போல அன்னப்புள் நடையில் செல்லன் அருகில் வந்து நின்றாள் ‘
5. புன்னைப் பூ சொரிந்தாற் போல பொண்டுகள் முறுவல் பூத்தார்
6. செந்தளிர் மாவிலை போல சிவந்தனள், சிலையைப் போல வந்தனள் கூறைமாற்றி
7. சங்குக் கழுத்தில் சரமெனவே கைகோர்த்து
8. முழுமதித் தினத்தில் அன்று – முழு நிலா வான் பரப்பில் எழுகின்ற நிலவைப் போல எழில் கொளும் மகளை…
9. குருத்தோலை போன்றும் கன்னிக் குலை ஈன்ற தென்னையாக உருத்தோற்றம் உடைய அன்னம்
10. பின்னியுடல் பாம்பிரண்டாய் பிணைந்தார்கள்

இவைகளில் பல மரபு ரீதியான உவமைகள் என்று சிலர் சொல்லக்கூடும். எனினும் 8ம் 9ம் 10ம் உவமைகள் போன்றவை நம்முள் புதிய கோலங்களை ஏற்படுத்துகின்றன என்பதும் உண்மை.

உருவகங்களில் ஒரு பத்தை அள்ளிக் கொள்கிறேன்.

1. காதல் வெறி கரைபுரள
2. விரி மார்பில் மென் விரல்கள் வீணைமீட்ட
3. மலரிதழில் ஊறிவரும் மது
4. இன்ப வெள்ளம் பீறிப்பாய
5. முற்றத்தில் பழுத்த கனியின் முழுச் சாறு பற்றி இதழின் வழிபறித்து
6. கன்னியவள் சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விட்ட களிப்பிலுற்றாள்
7. வேலி இடவில்லை விரல்.
8. குழைந்தாள் நிலா
9. தங்கக் குடங்கள் தழுவினான்
10. பார்வதிப் பெத்தா நெஞ்சில் பால் பொங்கி வழிய
செங்கதிரோனின் சில உவமைகளில் உள்ள மரபின் நெடி அவருடைய உருவகங்களில் இல்லை என்றே கூறலாம். அழுத்திய முத்தத்தின் இதழ்களினது கலத்தல் மரபார்ந்தது போல தோன்றினாலும் அது சர்வ லோக, சர்வகால சஞ்சாரம் உடையது. மற்றவை எல்லாம் கவிஞரது சிந்தனை வீச்சையும் கற்பனை வளத்தையும் கொண்டவை.
மொழி உருக்கள் ( கபைரசநள ழக ளிநநஉh) பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன தமிழ் இலக்கியத்திலும் நன்றாகவே இடம் பிடித்துள்ளன. சிலேடை ( pரn) அங்கதம் ( ளயவசைந ) என்பவை தமிழ் பதங்களே. தற்காலத்தில் முரணியல் ( pயசயனழஒ) முரண்நகை (ஐசழலெ) நகைச்சுவை (hரஅழரச) ஆகியவை பற்றியும் தமிழ் விமர்சனத்தில் பேசப்படுகின்றன. எனினும் இவற்றைப் பொதுவாகக் சுட்டுவதற்கு உள்ள (அல்லது இல்லாத) தமிழ் பதத்திற்கு பதிலாக மொழிஉருக்கள் என்ற பதத்தை பயன்படுத்துகிறேன். ஆங்கிலப் பதங்களுடன் சிலவற்றை ஒப்பிடுவதில் யாரும் அசூசைப்;படத் தேவையில்;லை. மரபார்ந்த தமிழ் ரீதியாக தற்காலத்தமிழ் பெரிய வளம் பெற்றதாகவும் சொல்ல முடியாது. மணிப்பிரவாளம் அன்றும் இன்றும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. அதனால் கன்னித்தமிழ் தன் கன்னிமையை இழக்க வேண்டும் என்பது என் கருத்தல்ல. நானும் தனித்தமிழ்தான். தேவையானபோது கடன் வாங்கி தமிழ் மயப்படுத்துகிறேன்.
விளைச்சலில் கேலிக்கும் கிண்டலுக்குமுரிய சிலேடை, அங்கதம், முரணியல், முரண்நகை போன்றவை காணப்படாதது வியப்பல்ல. இவைகளை விளைச்சல் போன்ற ஒரு கருத்து மோதல் அற்ற எல்லாம் சுபமாய் முடியும் ஒரு படைப்பில் காண்பது அரிது. வேளாண்மையில் அவை நிறையக் காணப்படுவது வேறு விடயம். நீலாவணனே முரண்பாடும் அங்கதமும் முரண்நகையும் முரணியலும் கலந்த ஒரு ஆழுமைதான்.
எனினும் நகைச்சுவை விளைச்சலில் நன்றாக விளைந்துள்ளது. விருந்துகளின மது உபசாரங்கள் நகைச்சுவை உபசாரங்களாக மாறுகின்றன
1. மடி அவிழ்ந்து வீழ மாணிக்கம் ஆடுகிறான்
2. தொந்தி வயிறுடையான் துரைசிங்கம் அண்ணாவி குந்தி வருகையினைக் கூத்தாடிக் காட்டுகிறான்.
3. சாமி அறையொன்றுக்குள் போய் அளவாக அனுக்கினான் சற்றுப் பின்னர் மறைவாக மற்றொன்றையும் மடிக்குள் கட்டி வந்தான்;.
4. வடிவேலு விடுவானா, போய் வார்த்துவிட்டு வந்து நின்றான். அடிசக்கை! அமர்களந்தான் அவனும்தான் ஆடுகிறான்.
5. உப்பென்று கேட்டார்கள், உறைப்பெங்கே மற்றொருவன், தப்பாமல் தம்பிக்கு வை தயிர் சீனி போடு தங்கம். அப்பாடா நல்ல வெட்டு ஆணத்தில் கொஞசம் ஊத்து.
இவற்றோடு பார்வதிப் பெத்தாவும் சாமியும் நகைச்சுவைப் பாத்திரங்களாகவும் உள்ளார்கள் அன்னம் கருவுற்ற செய்தியை அறியத் துடிக்கும் ஆவலை மற்றவர்களிடம் செங்;கதிரோன் வளர்த்துள்ள முறை அலாதியானது. இது அவருடைய புனைவாற்றலை வெளிப்படுத்தும் அதே சமயம் நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்துகிறது. சங்கதியை அறிந்த சாமி செல்லனைப் பார்த்து சொல்லும் ‘ சரியான ஆள் நீ !’ என்பதை விட சரியான நகைச்சுவை இருப்பதாகத்தோன்ற வில்லை.
புடிமம். சொற்களில் உயிர்ப்பது, சொற்களில் உயிர்க்கும் படிமம் (iஅயபந) மனதில் உதிக்கும் படம் இவை சொற்படிமங்கள். அனேகமாக உவமைகளிலும் உருவகங்களிலும் படிமம் பொதிந்திருக்கும். அவை படிமமொழி (iஅயபநசல) ஆகின்றன. உவமைகள், உருவகங்கள் சாராத படிமமொழி தனிப்படிம மொழி. இத்தகைய படிமமொழிகளில் மனதில் தைக்கும் வியப்புக்குரியவையே கலை இலக்கியத்தில் பேசப்படக்கூடும். இத்தகைய வியத்தகு படிம மொழிகளை ‘விளைச்ச’லில் தேடுகிறேன்.

அ) வழக்கம் போல கட்புல படிமமொழிகளே கதிக்கின்றன.
i. துடுப்புகள் வலிக்கப் பாயும் தோணி போல் ஓடிக்கட்டில் நடுப்புறம் வீழ்ந்தாள்.
ii. விழியோரம் நீர் ததும்ப…. விடைபெற்றாள்
iii. நெல்லினைக் குவித்த மேட்டில் நிறைகுடம் வைத்த வீடு.
iஎ. நீள்முடித் தேங்காயோடு நிறைகுடம்.
எ. முகில் இலா வான்பரப்பில் எழுகின்ற நிலவு போல் எழில்கொழும் மகள்

(ஆ) செவிப்புல படிம மொழி; ஒரு சிலவே
i. பெண் எலாம் குரவை வைத்தார்
பீரங்கி வெடியின் ஓசை.
ii. பொடுக்கென ஓர் நாள் பிள்ளை
பொக்கணிக் கொடியும் வீழ

(இ) சுவைப்புலன் படிம மொழியும் ஒரு சிலவே.
i. கொடுவாய் மீன் பொரியல் கோப்பை
ii. கருவாட்டுக் குழம்பினொடும் கைக்கூத்து அரிசிச் சோறும்.

(ஈ) தொடுகைப் புலன் படிமமொழியும் ஒரு சிலவே.
i. விரி மார்பில் மென் விரல்கள் வீணை மீட்ட
ii. பத்து மலர்விரல் பற்றி

(உ) சூக்கும படிமமொழி (யடிளவசயஉவ ழச iவெநடடநஉவரயட) ஒரு சில.
i. ஊரெலாம் உறங்கும் நேரம்
ii. வேல் விழி

பாத்திரப் படைப்புக்கு வருகிறேன். வுpளைச்சல் காவியத்தின் சம்பவங்கள் மேலோட்டமானவை. நடைமுறையிலுள்ள பொதுவான சம்பிரதாய நிகழ்வுகள். இந்த நிகழ்வுகளுக்கு ஒரு கதைப்பின்னணியைக் கொடுப்பது வேளாண்மைக் காவியத்திலிருந்து பெறப்பட்ட கதாபாத்திரங்களே.
எனினும் வேளாண்மைக் கதாபாத்திரங்கள் விளைச்சலில் சில மாறல்களைக் காட்டுவதும் தவிர்க்க முடியாததே.
வேளாண்மையில் உள்ளது போலவே விளைச்சலிலும் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது பார்வதிப் பெத்தாவின் பாத்திரம். வேளாண்மையில் உள்ளதைவிடவும் வெளிப்பாக உள்ளது. அன்னம்மாவின் பாத்திரம். திரிந்து போய் இருப்பது வண்டிக்காரன் சண்டியன் சாமித்தம்பியின் பாத்திரம.; உறைந்து போய் இருப்பது பொன்னம்மா அழகிப்போடி, கனகம்மா பாத்திரங்கள். புதிதாகப் புகுந்திருப்பது சில விருந்தாளிகள். முற்றும் மறைந்து போய் இருப்பது அணையூரின் மக்கள் பாத்திரங்கள்
வுpளைச்சல் காட்டும் பார்வதிப் பெத்தாவை விளைச்சலின் சில வரிகளிலேயே விபரித்து விடலாம்
1. ஒர் நாள் பெத்தா ஃ என்;னடி கனகம்;மா உன் இளையவள் கலியாணத்தை ஃ கண்ணை நான் மூடு முன்னம் காணத்தான் ஆசை ‘ என்றாள் ….. மெல்லமாய் கனகம் காதில் மென்மேலும் ஓதி ஓதி ஃ செல்லனைக் கேட்டுப்போக சிரத்தையாய் நின்று வென்றாள்
2. பந்தியின் நடுவில் பெத்தா பார்வதி வைத்தாள் சத்தம் ….ஃ சோறெடுத்து வாகா சொர்ணம், சுண்டலையும் கொண்டு வாகா ஃ ஆரெடுக்கப் போனா பார் ஆட்டிறைச்சி கறியை – தண் ஃ நீர்; எடுத்து வை வள்ளி, நீளத்தில் பாயை விரி.
3. ஆலாத்தி எங்கே என்று அவசரப்பட்டாள் பெத்தா
4. சரி ஏன்றாள் பெத்தா. மேலும் சடங்கினைத் தொடரலுற்றாள்.
5. பெட்டையை வீட்டுக்குள்ளே பெத்தாதான் கூட்டிப் போனாள்….
6. பார்வதிப் பெத்தா பார்த்து பகிடியும் விட்டாள். புpன்னர் ஃஆரப்பா
பந்தி அலுவலைக் கவனி என்றாள்
7. பந்தியை முடித்த பின்னர் பார்வதிப் பெத்தா ஃ கொஞ்சமும் குந்தினாள் இல்லை ஃ வந்தவர்க் கெல்லாம் வட்டாவை நீட்டி நீட்டி ஃ தந்தனள் மகிழ்ச்சியோடு, தாம்பூலம் தரித்தார் ஊரார்
8. கன்னிமை கழிய அன்னம் கனி ஒன்றைக் கருவில் உற்றாள்.. ஃ பின்னாலே திரிந்தாள் பெத்தா, பிடி ஒன்றும் பெற்றாள் இல்லை.

……… கள்ளி நீ அன்னம் என்று கத்தினாள். பின்னர் கையால் ஃ அள்ளினாள் அன்னம்மாவை ஆசையில் முத்தமிட்டாள்
9. …….. பார்வதிப் பெத்தா ஓடி பரிகாரம் பண்ணலானாள்
வேப்பிலை கொத்தை பிய்த்து வெளயிலே காவல் போட்டாள்
10. ….. பெத்தா ஃ – துள்ளினாள் குமரி போல, தூக்கியே மடியில் வைத்து ஃ பிள்ளையைக் கொஞ்சிக் கொஞ்சி பேராசை தீர்த்துக் கொண்டாள்
11. …. வேர் அவள் குடும்பத்தார்க்கு விழுதினாய் வந்த கொள்ளுப் ஃ பேரனின் பேரை எங்கும் பெருமையாய் சொல்லி சொல்லி ஃ ஊரெலாம் வந்தாள் ஓடி உடம்புதான் களைத்துப்போனாள்.
அன்னம், வேளாண்மையில் உள்ளதை விட விளைச்சலில் எப்படி கூடிய வெளிpப்பாக உள்ளாள்; என்பதை இப்.போது எண்ணுகிறேன்.
வேளாண்மையில் தெரிந்த அன்னம்மா ‘நேருக்கு பார்த்த கண்ணை நிலத்திலே புதைத்து விட்டு ஃ மேலுக்கு விரலால் சீய்த்து மிரண்ட – அன்னம்மா. செல்லனின் ‘அருகிலே மடியை மெல்ல அவிழ்த்தவல் அள்ளி’ அவனுக்குத் தர எடுத்தவள்தான் அன்னம்மா …. தடுக்கியே வரம்பில் சாய்ந்த அவளை, செல்லன் இருகையால் தூக்கிக் கொஞ்ச இடித்தவள் அன்னம்மா, ‘கோபமா மச்சான் என்ற குறுநகை புரிந்தவளும் அன்னம்மாதான்.
சத்தம் போடடொரு ‘வரால் மீன் துள்ளி பொக்கென நீரில் பாய்ந்து ஓட்டமாய் ஓட அஞ்சி ஓடியவள் அன்னம்மா. வடிவேல் வீட்டில் (செல்லனின்) சத்தத்தை மதித்தும் போலிச் சாமிபோல உள்ளே இருந்தவள் அன்னம்மா. எலுமிச்சை ஓரமாக நெஞ்சை இழந்து (செல்லனை) ஒளிந்திருந்து பார்த்தவள் தான் அன்னம்மா. பாயால் தன்னை மறைத்துக் கொண்டே செல்லனின் பக்கம் அதனை வீசி விரைந்து ஓடி வீட்டுக்குள் மறைந்தவளும் அன்னம்மாதான்.
இதுதான் நீலாவணன் காட்டும் அன்னம்மா. செல்லனை விரும்பியிருந்தும் அதை வெளிக்காட்டாதவள். அவனுடைய கொஞ்சலுக்கு இடர்பண்ணி இடித்தவள். செல்லனின் சத்தத்தைக் கேட்டும் போலிச்சாமியாய் மௌனித்தவள். எலுமிச்சை ஓரமாய் செல்லனை ஒளிந்திருந்து பார்த்தவள். புhயை வீசிவிட்டு ஓடிப்போனவள். ‘கோபமா மச்சான்’ என்று குறுநகை புரிந்த ஒன்றுதான் அவளுடைய குரலும் பரிவும். ஆக, அவள் வேளாண்மையில் ஒரு கொத்துக்குள் மாம்பழம். றுழசனளறழசவா இன் டுரஉல போல. ‘யு எழைடநவ hயடக hனைனநn டில வாந அழளளல ளவழநெ ‘
ஆனால் விளைச்சலில் அவள் மனம் திறந்து பேசும் ஒரு காதலி. சமைந்து இரண்டொரு ஆண்டுகள் கழிந்த பின் இது அவளுக்கு இயல்பே. பின்நோக்கலாக அவள் தனக்குத்தானே பேசுகிறாள். எனினும் அது ஒரு மனம் திறந்த பேச்சு. அவளுடைய மனதை வாசகர் கூடுதாலாக அறியக்கூடியதாக உள்ளது.
‘ சத்தியம் அத்தான், உன்னைச் சந்திக்க ஆசை
உத்தமம் இல்லை நாளை ஊர் வாயை மூடலாமோ’

‘ பார்வதிப் பெத்தாவோடு பள்ளயம் பார்க்கப் போன
நேரத்தில் நீயும் அத்தான் நிழல் போல பின்னே வந்தாய்

‘ஊர் வம்பு பேசுமென்றே உன்னோடு பேசவில்லை. ‘

‘தாலிக்கு நாளைப் பார்த்து தவித்தாளே இந்த அன்னம்’
எனினும் இது ஒரு சிறு நீக்கல் தான். இந்த நீக்கலைத் தவிர அன்னத்தை விளைச்சலில் தனித்துவமாகக் காண முடீயவில்லை என்பதும் உண்மைதான். தோற்றத்தைப் பொறுத்தவரை நீலாவணனின் ‘ சந்தணத்தை கடைந்து சிற்பி சமைத்தெடுத்த மாரியம்மன் சிலை’ என்பதற்குள்ளே செங்கதிரோன் அடங்கி விட்டார் போன்றும் தெரிகிறது. தேக்கினிலே கடைந்தெடுத்த சிற்பம் என்கிறார்.
மற்றவை எல்லாம் வழமையான தோற்றங்களும் மாற்றங்களும் தான். எனினும் அன்னம்மாவின் உருவப் பொலிவை அவளுடைய உணர்ச்சி நிலைகளுடன் காட்ட செங்கதிரோன் பெரிதும் முயன்றுள்ளார் எனலாம்.
வண்டில்கார சண்டியன் சாமித்தம்பி விளைச்சலில் எவ்வாறு திரிந்து போனான்… என்பது அடு;த்த கேள்வி. சுhமி பற்றிய விளைச்சலின் வரிகள் விடை பகர்கின்றன.
1. மாப்பிளை செல்லனோடு மகிழ்ச்சியில் நின்ற சாமி ஃ கூப்பிட்ட சத்தம் கேட்டு குதித்தோடி வந்தான். கந்தர் ஃ ஏற்பாட்டைப்பார் என்றோத ஏகினான் உள்ளே, லிக்கர் ஃ சாய்ப்பிலே வாங்கி வந்த சரக்கொன்றை தூக்கி வந்தான்

2. அறைக்குள் போய் அளவாய் அனுக்கினான், சற்றுப்பின்னர் ஃ மறைவாக மற்றொன்றை தன் மடிக்குள் கட்டிவந்தான்

3. சந்திக்குப் போன சாமி, சாராய வெறியில் மீண்டான்.

4. கூப்பாடு போட்டான் சாமி குடிவெறியில் கூச்சலிட்டான்

5. என்னடா இளையப்போடி, இன்னுமா ஒன்றுமில்லை.
அன்னம்மா வயிற்றில் இன்னும்அடையாளம் காணோம் என்று
பொன்னம்மா பொருமுகிறாள், பொடிச்சியின் நிலைமை என்ன ?

6. சாமியோ விட்டான் இல்லை, சாராய வெறியில் நின்று
பூமியில் தள்ளம்பாறி புழுதியுள் விழவும் பார்த்தான்

7. காலையில் இருந்தே சாமி கணக்காக போட்டுக் கொண்டான்
வேலைக்கு ஆள்தான், கந்தர் விருந்துக்கும் பொறுப்பாய் விட்டார்
சாலையில் போனோர் எல்லாம் சாமியைப் பார்த்து வேலி
ஓலைக்கு மேலால் எட்டி உன்பாடு ஓகோ என்றார்

விளைச்சலில் வரும் வண்டில் கார சண்டியன் சாமித்தம்பி இவ்வளவுதான். வேளாண்மையில் வரும் சண்டியன் சாமித்தம்பி பற்றிச் சொல்ல எவ்வளவோ இருக்கிறது. இங்கு இடமும் இல்லை பொருத்தமும் இல்லை. சாமி வேளாண்மையில், கதையையொட்டிப்பெறும் அதி முக்கியமான பாத்திரத்தை விளைச்சலில் பெற முடியவில்லை. விளைச்சலில் அவன் வெறும் எடுபிடி ஆளாகவும் மேலாண்மையற்ற பலவீனமான குடிகாரனாகவும் திரிபு அடைகிறான். வுpளைச்சலில் கேட்டுப்போவதும், பதிலுக்கு போவதும் சம்பிரதாய வைபவங்கள் தானே. சாமியைப் போல சகலரும் குடிவெறிப் பண்பாட்டின் குதூகல சித்தரிப்புகளாக இருக்கும் போது சாமிக்கு வேறென்ன வேலையும் விசேடமும் கொடுக்க முடியும் விளைச்சலில் செங்கதிரோனால்.

கந்தப்போடியின் பாத்திரம் திறந்த சோடாப் புட்டியாய் காரம் குறைந்து போனதுதான் பரிதாபம். வேளாண்மையின் ஆரம்பத்தில் பல எதிர்பார்ப்புகளைத் தந்து கதை முரணின் காலாக தோன்றிய கந்தப்போடி வேளாண்மையின் கதிரில் எந்த ஊசலாட்டமும் இலலாது , இலக்குத்தவறி கரைந்து போன ஒரு பாத்திரமாக தோற்றங்காட்டுகிறார். இவ்வாறு வேளாண்மையிலே குறையத்தொடங்கியதாக தோற்றம் காட்டும் கந்தப்போடியின் பாத்திரம், விளைச்சலில் மேலும் குறைவடைந்து அழகிப் போடியின் சாயலுக்கு தள்ளப்படுகிறார் வேளைண்மையில் நாசுக்காகவும் நாகரிகமாகவும் நகைச் சுவையாகவும் எச்சரிக்கையாகவும் நயந்தும் உவந்தும் நறுக்கென வெட்டி ஒட்டி பேசியும் உற்சாகமே உருவானது போல தோன்றிய பொன்னம்மா கூட விளைச்சலில் அழகிப்போடி – கனகம்மா போன்ற சம்பிரதாயபூர்மான பெற்றோர் பாத்திரமாக மாற்றப்பட்டுள்ளார். முரண் அறுந்து போன கதையில் அவர்கள் வேறு விதமாக அமைய முடியாது போலும். பார்வதிப்பெத்தா வேளாண்மையிலேயே அன்னம் – செல்லன் கலியாணத்துக்காக சார்பு கொண்;டுவிட்ட முரண் நிலைப்பாத்திரம். ஆந்த முரண் பார்வதிப் பெத்தாவை கடைசிவரை இயக்க விளைச்சல் அனுமதிக்கிறது. அதே சார்பு நிலை கொண்ட சாமிக்கு கதை முரண் தவறிய காரணத்ததால் இடமில்லாமல் போய்விட்டது.

தவிர, வேளாண்மை காட்டும் ஊர் முகங்கள் விளைச்சலில் தொடர்ந்து காணப்படவில்லை. வேளாண்மையின் பெரும் பரப்பைத் தவிர்த்து இரண்டு குடும்பங்களின் உறவை மாத்திரம் கருத்தில் கொண்ட விளைச்சலுக்கு பரந்த பிரதேசப் பின்னணியும் பரந்த மக்கள் கூட்டமும் அவசியப்படவில்லை போலும்.

அப்படியானால் விளைச்சலை வேளாண்மையின் தொடர்ச்சி என்று சொல்லலாமா என்ற கேள்வியும் எழுகிறது. அல்லது எந்த அளவுக்கு விளைச்சல் வேளாண்மையின் தொடர்ச்சியாக உள்ளது என்ற கேள்வியாகவும் கொள்ளலாம். ஏப்படி இருந்தாலும் இப்போது நான் பாத்திரப் படைப்பில் பிரிந்து வேளாண்மையினதும் விளைச்சலினதும் வேறு பிரதேசத்துக்கு புகவேண்டியுள்ளது.

விளைச்சல் வேளாண்மையின் தொடர்ச்சி என்றால் வேளாண்மையின் தொடுப்பை (pடழவவiபெ ) விளைச்சல் தட்டிக் கழிக்க முடியாது. வேளாண்மையின் தொடுப்பு கதைமுரணை அடிப்படையாகக் கொண்டது. கதைமுரண் என்பது கதையை இயக்கும் எதிரெதிர் சக்திகளின் மோதல். வேளாண்மையினது கதைமுரணின் ஆரம்ப புள்ளியாக கந்தப்போடி – அழகிப் போடியின் பகைமுரண் இருந்தது. அன்னம்மா சமைந்த செய்தி உரிய காலத்தில் உரிய முறையில் வழங்கப்படாததால் நீறு பூத்த நெருப்பாக இருந்த பகைமுரண் புகையத் தொடங்கியது. அந்தப் புகைச்சலே கதையின் விறுவிறுப்புக்கு தூபமிட்டது. அந்தப் புகைச்சல் சுவாலையாவதற்கு முன் நீலாவணனின் மரணம் நேர்ந்தது. கனன்று கொண்டிருக்கக் கூடிய அந்த சுவாலையில் நீரூற்றுவது போல நீலாவணனின் மரணத்தின் பின் அவர் கடைசியாக எழுதிய கதிரின் பாவில் ஒரு இடைச்செருகலும் புகுந்தது. எனினும் அன்னம் சமைந்த தண்ணீர் செலவுக்குப் பின்னும் கந்தப்போடி அன்னம் – செல்லன் தொடர்பை விரும்பவில்லை என்பதற்கு ஆதாரம் உள்ளது. வேட்டைக்கு செல்லனைக் கூடம்டிப்போன வடிவேல் – சாமியின் கூட்டை வெறுத்து, ‘ வடிவேலைக் கண்டு நாலு வார்த்தை சொல்லாமலுக்கு ஃ குடியேன் நான் தண்ணீர் அந்தக் கூட்டத்தால் வந்ததெல்லாம் ஃ கடவுளே என்றார் கந்தப்போடி கவலையோடு ‘ என்ற அடிகளை ஆதாரமாகக் கொள்ளலாம்

வேளாண்மையின் மற்றுமொர் கதைமுரண், செல்லனின் முறை மச்சாளும் காதலுக்குரியவளுமான அன்னத்தின் மீது கண்ணமுத்தடையான் பெற்ற கணபதிப்பிள்ளைக்கு இருந்த கண்’. இதை தனது நினைவுகள் குதிர்தலில் முதலில் வெளிப்படுத்தியவள் பார்வதிப் பெத்தா. அடுத்து வெளிப்படுத்தியவன் சந்தி வம்மியின் கீழ் தாயமாடிய வீமன். ( ‘செல்லையா என்றால் சிம்ம சொப்பனம் கணபதிக்கு ஃ பொல்லாத போட்டி அந்தப் பொடிச்சி அன்னம்மாவாலே) மூன்றாவதாக இந்த முரண் வெளிப்படுவது அன்னம் சமைந்த தண்ணீர் செலவில் கலந்த கொண்ட உடையாரின் மனைவிக்கு பொன்னம்மா காட்டும் எதிர்வினையால்.

‘ மனதுக்குள் இவள் என்ன மச்சிமுறை கொண்டாட மஞ்சள் ஊற்றி
தனக வந்தாள் போலும் என பொன்னம்மா முகமோடி கறுக்கலாச்சு ‘

வேளாண்மை கதையை இயக்கிய மூன்றாவது முரண் வன்னிய தெருவாருக்கும் உடையார் தெருவாருக்கும் இடையே நிலவிய போட்டியும் பொறாமையுமாகும். சித்திரை வருசத்துக்கு தேர் செய்து சுற்றுவதில் மட்டுமல்லாது பொதுவாகவே இரு சாராருக்குமிடையில் காழ்ப்பு இருந்தது. இந்தக் காழ்ப்பும் கதையை ஊர் மட்டத்தில் அல்லது சமுக மட்டத்தில் கொண்டு செல்ல உதவுகிறது.

வேளாண்மையின் இந்த கதை முரண்களை ஒப்புக் கொள்வது போல அமைகிறது : நீலாவணன் காவியங்கள் நூலுக்கு எழில்வேந்தன் எழுதிய பதிப்புரை.

‘ இக் காவியத்தின் பிந்திய கதை நீலாவணனால் எழுதப்பட்டிருப்பின் செல்லன்-அன்னம் திருமணச் சடங்கும் அதனுடன் தொடர்பு பட்ட சடங்குகளும் பெரிய நீலாவணைக் கிராமத்தின் பேச்சியம்மன் மற்றும் விஸ்ணு கோவில் திருவிழாக்கள், பிள்ளை பேறும், அதனுடன் தொடர்புடைய சம்பிரதாயங்கள், அன்னத்தை திருமணம் செய்ய முனைந்து தோற்ற உடையாரின் மகன் கணபதிப்பிள்ளையின் குழப்படிகள். அவன் மருந்து மந்திரம் செய்தல் அதனால் செல்லன் அன்னத்தைப் பிரிந்து வேறொரு பெண் மையலில் வீழல், பின் அவன் திரும்பி வருதல், பார்வதிப் பெத்தாவின் சுகவீனம், ஆயுள் வேத மருத்துவ முறைகள், பெத்தாவின் மரணம் அதனுடன் தொடர்படைய சடங்கு சம்பிரதாயங்கள்,பொங்கல், கதிர்காமத்துக்கு கால்நடைப் பயணம், எனப் பல பல செய்திகளைக் கொண்டு வந்திருக்கும். ‘

வேளாண்மையியன் கதை நேர்த்தியான கதை முரண்களைக் கொண்டமைந்தது என்பது தெளிவு. இந்தக் கதை முரண்களில் சிக்குப்பட செங்கதிரோன் விரும்ப வில்லை போலும். வேளாண்மை போன்ற ஒரு பாரப்பட்ட கதைப்புலத்தை செங்கதிரோன் போன்ற ஒரு ஏகலைவன் ஏற்கத் தயங்கியதில் ஆச்சரியம் இல்லை. அவர் ஏற்றுக் கொண்ட பங்கை ஈடுபாட்டுடன் செய்திருப்பதே பெரும் சாதனை.

செங்கதிரோன் செய்ததும் செய்யக்கூடியதும் இப்போது தெளிவாகிறது. அவர் செய்துள்ளது வேளாண்மை தொடர்ச்சியின் முதலாவது பகுதி எனலாம். இரண்டாவது, மூன்றாவதற்கான வெளியும் இருக்கிறது. இந்த வெளியை நிரப்பப்போவது யார் ? என்ற கேள்வியும் உள்ளது. வேறு யார் சாட்சாத் செங்கதிரோனே அதையும் செய்ய வேண்டும்.

இன்றைய நிலையில் வேளாண்மையை மேலும் தொடர்வதற்கு வேறு யாரும் இல்லை. விளைச்சலைப் படைத்த செங்கதிரோனின் சிந்தனையும் கற்பனையும், உணர்வும் உள்ளமும் வேறு யாருக்கும் வரப் போவதில்லை. விளைச்சலுக்காக அவர் வாலாயப்படுத்திய அறுசீர் விருத்தம் அவருடைய முதலாவது பலம். பாத்திரங்களின் உணர்வுகளை நுட்பமாக வெளிப்படுத்தக் கூடிய திறனும் அவருக்கு அத்துப்படி. மட்டக்களப்பின் மொழிவழக்கு அவருடைய கைவசம். இப்பிரதேசத்தின் சடங்கு சம்பிரதாயங்களுடன் நீலாவணனுக்கிருந்த பிறவித் தொடர்பு அவருக்கும் உண்டு. நீலாவணனின் புனைவுத் திறன் மட்டுமே செங்கதிரோனுக்கு புரிய வேண்டியுள்ளது. விடுபட்ட தடயங்களை இரண்டொரு பின்நோக்கல்;களினால் மீட்டுக்கொண்டே அவர் புதிய போகத்தை ஆரம்பிக்கலாம்.

ஆகவே, தமிழ் கூறும் நல்லுலகத்தின் சார்பாக நான் செங்கதிரோனை வேண்டிக் கொள்வது:

வேளாண்மைக் காவியத்தின் தொடர்ச்சியான ‘விளைச்ச’லின் மீதிப் பகுதிகளையும் தயவு செய்து படையுங்கள். மறு போகத்துக்காக மண் காத்திருக்கிறது.

சண்முகம் சிவலிங்கம்
பிரகாஷ்த்தம்
பாண்டிருப்பு, கல்முனை. இலங்கை
07112011

Leave a Reply

Your email address will not be published.